சிவகங்கையை தூய்மைமிகு நகரமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் நேற்று (மே 26) சிவகங்கை காந்தி வீதியில் உள்ள 120 கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்களில் நகராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பல்வேறு கடைகள் மற்றும் பிரபல ஷாப்பிங் மால்களில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் மற்றும் மெகா சைஸ் பைகள் உள்ளிட்ட 595 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுபோல் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இதுகுறித்து நகர்மன்ற தலைவர் தெரிவிக்கையில், பொதுமக்கள் தானாக முன்வந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து சிவகங்கை நகரை தூய்மையாக மாற்ற ஒத்துழைப்பு நல்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல்: ரூ.24.75 லட்சம் அபராதம் விதிப்பு!