ETV Bharat / state

ஊழல் கறை படியாதவரா கார்த்தி சிதம்பரம்? ஜி.கே.வாசன் கடும் தாக்கு

சிவகங்கை: பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சிவகங்கையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, கார்த்தி சிதம்பரம் துாய்மையானவரா, நேர்மையானவரா, ஊழல் கறை படியாதவரா என கேள்வியெழுப்பியதோடு, அடுத்தவரை குறை கூற தகுதியவற்றவர் அவர் என விமர்சித்துப் பேசினார்.

அதிமுக
author img

By

Published : Apr 5, 2019, 9:35 AM IST

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். இந்நிலையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சிவகங்கை அரண்மனை வாசல் முன் நேற்று பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி 39 இடங்களிலும், 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றிபெறும். மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் தொடரும். நடைபெறவுள்ள தேர்தல் இந்திய தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். வேஷம் போட்டு-கோஷம் போடும் திமுக-காங்கிரஸ் கூட்டணி அல்ல நாங்கள்.

சிவகங்கையில் ஜி.கே.வாசன் பரப்புரை

எதிர்கட்சி வேட்பாளர் நமது கூட்டணி மீது அவதூறு குற்றச்சாட்டு சுமத்துகிறார். அவர் என்ன துாய்மையானவரா, நேர்மையானவரா, ஊழல் கறை படியாதவரா, அடுத்தவரை குறை கூற தகுதியவற்றவர் அவர் (கார்த்தி சிதம்பரம்). காங்கிரஸ்-திமுக மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில் ஒரு இஸ்லாமியரையோ, கிறிஸ்தவரையோ போட முடிந்ததா? இதுதான் சிறுபான்மையினர் நலன்காக்கும் செயலா?

வாரிசு அரசியலலைப்பற்றி பேசும் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகளில் ஐந்தில் வாரிசுகளை நிறுத்திவைத்துள்ளீர்கள். இதுதான் உங்கள் ஜனநாயகமா. பாஜகவை பற்றி பேசும் திமுக கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்து பதவி சுகம் அனுபவித்தவர்கள்தான். நீங்கள் செய்தால் சரி? அடுத்தவர் செய்தால் தவறா?

கார்த்தி சிதம்பரம் பணம் படைத்திருந்ததால் சிபிஐ வழக்கு என அழைந்துகொண்டிருக்கிறார். உங்களிடம் பணம் மட்டுமே உள்ளது. ஆனால், வேட்பாளர் ஹெச்.ராஜாவிடம் நல்ல குணம் இருக்கிறது. நல்ல குணம் மூலம் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். எங்களது வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கு மக்கள் செயல்பாடு மட்டுமே பணி. அவர் நீதிமன்றத்திற்கு சென்று பிணை வாங்கவேண்டிய அவசியம் கிடையாது. காவல் நிலையத்திற்குப் போகவேண்டிய அவசியம் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

ஹெச்.ராஜா நல்ல குணமுள்ளவர் - ஜி.கே.வாசன்!

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது

தமிழகத்தில் அதிமுக கூட்டணி 39 இடங்களிலும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றிபெறும். மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் தொடரும். வரும் தேர்தல் இந்திய தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.

வேஷம் போட்டு கோஷம் போடும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அல்ல. அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய கூட்டணி அதிமுக கூட்டணி என்றார். எதிர்கட்சி வேட்பாளர் ஆவேசமாக பேசுகிறார். ஆதரமற்றமுறையில் நமது கூட்டணி மீது அவதூறு குற்றச்சாட்டு சுமத்துகிறார். அவர் என்ன தூய்மையானவரா, நேர்மையானவரா, ஊழல் கறை படியாதவரா அடுத்தவரை குறை கூற தகுதியற்றவர் அவர். (கார்த்தி சிதம்பரம்).

காங்கிரஸ் - திமுக மதச்சார்பின்மையை பற்றி பேசுகிறார்கள். காங்கிரஸ் தமிழகத்தில் போட்டியிடும் 9  தொகுதிகளில் ஒரு இஸ்லாமியரையோ கிறிஸ்தவரையோ போட முடிந்ததா? இதுதான் சிறுபான்மையினர் நலன்காக்கும் செயலா என்று கேள்வி எழுப்பினார்.

எங்களை பார்த்து ஊழல்வாதிகள் என்று கூறும் உங்களுக்கு ஊழலைப்பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது. வாரிசு அரசியலை பற்றி பேசும் காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தில் 9 தொகுதிகளில் 5 ல் வாரிசுகளை நிறுத்திவைத்துள்ளீர்கள் இதுதான் உங்கள் ஜனநாயகமா என்றார்.

பாஜகவை பற்றி பேசும் திமுக கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்து பதவி சுகம் அனுபவித்தவர்கள்தான். நீங்கள் செய்தால் சரி அடுத்தவர் செய்தால் தவறா?. 

கார்த்தி சிதம்பரம் பணம் படைத்திருந்ததால் சிபிஐ வழக்கு என அழைந்துகொண்டு இருக்கிறார். உங்களிடம் பணம் மட்டுமே உள்ளது. ஆனால் ஹெச்.ராஜாவிடம் நல்ல குணம் இருக்கிறது. நல்ல குணம் மூலம் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

எங்களது வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கு மக்கள் செயல்பாடு மட்டுமே பணி. அவருக்கு கோர்ட்டுக்கு போய் ஜாமின் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. போலீசுக்கு போக வேண்டிய அவசியம் கிடையாது என்று பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.