சிவகங்கை: சிங்கம்புணரி அருகே வேங்கைப்பட்டியில் உள்ள தொட்டிகாத்தான் கண்மாயில் இன்று (ஜன.26) மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
நீர்ப்பாசனம் நிறைவுபெற்று வயல்வெளியில் பயிர்கள் அறுவடைசெய்த பின், கண்மாயில் தேங்கியுள்ள குறைவான நீரில் மீன்களைப் பிடிக்க கிராமத்தார்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வு மீன்பிடித்திருவிழாவாகும்.
இந்நிகழ்வில் அந்தந்த கண்மாய்ப் பகுதிகளில் உள்ள ஊர்ப் பொதுமக்கள் ஒன்றுகூடி மீன்பிடித்து மகிழ்வர்.
இந்நிலையில் இன்று தொட்டிகாத்தான் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
கண்மாய் ஆயக்கட்டுகாரர்கள் கொடி அசைக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்மாயில் இறங்கி மீன்பிடித்து மகிழ்ந்தனர். கட்சா, ஊத்தா, பரி, வலை உள்ளிட்ட கிராமிய மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு முழங்கால் அளவு இருந்த கண்மாய் நீரில் மீன்களைப் பிடித்தனர்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி மாலை அறிவிப்பு