சிவகங்கை: சட்டக் கல்லூரியும் வேளாண் கல்லூரியும் அமைத்து தரப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.
திமுக வெற்றி பெற்ற பின்பு திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சட்டபேரபையில், சிவகங்கை மாவட்டத்திற்கு சட்டக்கல்லூரியும் வேளாண் கல்லூரியும் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
ஆனால், சட்டக் கல்லூரியும், வேளாண் கல்லூரியையும் காரைக்குடியில் அமைக்க இருப்பதாக தகவல் தெரியவந்ததும், மாவட்ட தலைநகர் சிவகங்கையில் சட்டக் கல்லூரியை அமைக்க பல்வேறு கோரிக்கை மனுக்கள் சட்ட அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து காரைக்குடியில் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதால், கவனத்தை ஈர்க்கும் வகையில் இரண்டு நாள்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைநகரத்தில் தான் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. மிகவும் பின்தங்கிய சிவகங்கையில் சட்டக் கல்லூரி மற்றும் வேளாண்கல்லூரி வந்தால் மாவட்டம் மேலும் வளர்ச்சி பெறும் என்பதே சிவகங்கை மக்களின் விருப்பம்.
இதனை வலியுறுத்தி டிசம்பர் 11ஆம் தேதி வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டமும் நடந்தவுள்ளனர். இரண்டு நாள் வழக்கறிஞர்கள் போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பாதிக்கபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அருப்புக்கோட்டையில் பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி மரணம்!