சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 50 பேர் இணைந்து வெளிநாடுகளில் செய்யப்படும் டோமினிக் எபெக்ட் எனப்படும் தொடர் சரிதல் நிகழ்வை தீப்பெட்டிகளை கொண்டு செய்யும் முயற்சியில் இறங்கினர்.
இதற்காக கடந்த 21 நாள்களாக கடின உழைப்புடன் தீப்பெட்டிகள் சரியும்போது கல்லூரியின் பெயர், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவரது பொன்மொழிகள் தெரியும்படி 21 ஆயிரம் தீப்பெட்டிகளை அடுக்கி வைத்து வடிவமைத்தனர்.
தீப்பெட்டிகளை வடிவமைத்ததுடன் அதனை 2 நிமிடம் 10 செகண்டில் சரித்து உலக சாதனையும் படைத்தனர். இதனை பாராட்டி அந்த மாணவர்களுக்கு சோழன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனர்கள் சாதனை சான்றிதழையும் வழங்கி பாராட்டினர்.
இந்த நிகழ்வை கல்லூரி தலைவர், பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கண்டுகளித்ததுடன் இந்த முயற்சியை மேற்கொண்ட மாணவர்களை வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க: மதுரையில் 'டிரான்ஸ் கிச்சன்'- திருநங்கையரின் சாதனை முயற்சி