பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 'சமக்ர சிக்சா அபியான்' திட்டத்தின் கீழ் அரசு செலவில் பள்ளி மாணவர்களை வாகனத்தில் அழைத்து வரும் திட்டம் சிவகங்கையில் தொடங்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், மானாமதுரை ஒன்றியம், கண்ணங்குடி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக மாதம் ஒரு மாணவருக்கு 500 முதல் 600 ரூபாய் வரை அரசு வழங்கவுள்ளது. காளையார் மங்கலத்தில் நடைபெற்ற சமக்ர சிக்சா அபியான் விழாவில், ஒருங்கிணைந்த கல்வி திட்ட மேற்பார்வையாளர் பிளோரா, வட்டார கல்வி அலுவலர் இந்திராணி, தலைமை ஆசிரியை ஜெயா, ஆசிரியர்கள் சகாயதிரவியம், கோபிகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.