சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண்பதற்கு அதிக அளவில் பொதுமக்கள் குடும்பத்துடன் வருவார்கள். இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் தொழுவில் காளைகள் அவிழ்ப்பதற்கு முன்பாகவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கட்டு மாடுகளாக வயல்வெளி, கண்மாய்ப் பகுதிகளில் அவிழ்த்து விடுவார்கள். அதைக் காண கூட்டம் கூட்டமாக நிற்பார்கள்.
இவ்வாறு அவிழ்த்து விடும் காளைகள் பார்வையாளர்களுக்குள் புகுந்து காயங்களை ஏற்படுத்தும். அதேபோன்று, நேற்று நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், டாடா ஏசி வாகனத்தில் கட்டப்பட்டிருந்த காளை ஒன்று கட்டு அவிழ்ந்த நிலையில் ஆவேசமாக ஓடியது.
வேகமாக வந்த காளை எதிரில் வந்த தாய், குழந்தையைக் கண்டதும் தன் ஆவேசத்தை அடக்கி, அவர்களைத் தாண்டிச் சென்றது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் பங்கேற்காமல் திரும்புகிறோம்: மாட்டின் உரிமையாளர்கள் வேதனை