சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மாங்குடி கிராமம் உள்ளது. அங்குள்ள அய்யனார் கோயில் அருகில் உள்ள கருவேலங்காட்டில் ரவுடி கும்பல் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அங்குள்ள கண்மாய் பகுதியில் இருந்த ஏழு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அப்பகுதியில் மண் அள்ளி வந்ததும், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, வழப்பறி வழக்குகள் இருந்துள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா, 7 வாள்கள், 3 வீச்சு அரிவாள்கள், 6 செல்போன்கள் மற்றும் 8 இரண்டு சக்க வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து ஏழு பேரையும் காவல் துறையினர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
இதையும் படிங்க: சோதனைச் சாவடியில் கையூட்டு வாங்கும் அலுவலர்கள்; சிசிடிவி பதிவில் கையும் களவுமாக சிக்கினர்!