சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் தியாகராஜா அரசு மேல்நிலைப்பள்ளியில் வெங்கடேசன், மாதவன் ஆகிய இருவரும் 8ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். பள்ளி இடைவேளையின் போது கண்மாய் பகுதிக்கு சென்றபோது, கந்தகதாது கொண்ட உருண்டையான வெடிபொருள் கிடந்ததுள்ளது. அதை எடுத்து வந்த மாணவர்கள், பள்ளி மேல் பகுதியில் அதை வெடிக்கச் செய்துள்ளனர்.
அந்த உருண்டை வெடித்து சிதறியதில் இருவரின் கை, விரல்கள், நெஞ்சு பகுதி பலத்த காயமடைந்தன.
இதையடுத்து, மாணவர்கள் இருவரும் சிகிச்சைக்காக பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.