இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் கருத்து வருத்தம் அளிக்கிறது. அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதேபோல் நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு, இலங்கை பிரச்னை உள்ளிட்ட மற்ற பொது விஷயங்கள் குறித்தும் ரஜினி கருத்து கூறவேண்டும். விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக கூறியுள்ள அவர், தமிழ்நாடு தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அவரது கருத்தை சொல்ல வேண்டும்.
மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. அதிக பெரும்பான்மையைக் கொண்டு எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றும் நிலைக்கு பாஜக அரசு வந்துவிட்டது. நாடாளுமன்றக் குழுவை அமைக்காமல், பாஜக அரசு அவசர அவசரமாக சட்டத்தை நிறைவேற்றுகிறது. காக்காவின் நிறம் வெள்ளை என்று சட்டம் கொண்டுவந்தாலும் நாடாளுமன்றத்தில் பாஜக நிறைவேற்றிவிடும்.
காஷ்மீரில் நடப்பது அரசியல் நாகரீகம், ஜனநாயகத்திற்கு எதிர்மறையான செயல்பாடு. காங்கிரஸ் கட்சி குறித்து வைகோவின் கருத்து வருத்தம் அளிக்கிறது. அவர் மனதில் காங்கிரஸ் மீது இவ்வளவு கோபம் இருப்பது எனக்கு தெரியவில்லை” என்றார்.