சிவகங்கை அருகே கொல்லங்குடியில் வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "அதிமுக கூட்டணி மெகா கூட்டணி என மக்கள் சொல்கிறார்கள்.இது மத்திய அரசை நிர்ணயிக்கும் வெற்றி கூட்டணியாகும். ராகுல் காந்திக்கு மக்கள் ஆதரவு இல்லை. ராஜீவ் காந்தியோடு காங்கிரஸ் செல்வாக்கு இழந்து விட்டது. காங் கூட்டணிக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை.
அதிமுக மெகா கூட்டணியை பார்த்து திமுக கூட்டணியில்புலம்பல்ஒலி கேட்கின்றது. பொள்ளாச்சி குற்றவாளிகளை எடப்பாடி அரசு தப்ப விடாது.குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை வழங்கியே தீரும். பொள்ளாச்சி வழக்கில் யாருடைய குறுக்கிடும் இருக்காது", என்றும் தெரிவித்தார்.