சிவகங்கை: மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் முருகன். இவர் மானாமதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள பகுதிகளில் ஆட்டோ ஒட்டி வருகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன் இவருடைய செல்போனுக்கு அபராதம் விதித்தது தொடர்பாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து பார்த்த பின்பு ஆட்டோ ஓட்டுநர் முருகன் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்.
டார்கெட்டை முடிக்க ஆட்டோ டிரைவரை முடித்த காவல் துறை
அதாவது ஆட்டோ ஓட்டும் போது ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன சோதனையில் டார்கெட் முடிக்க வேண்டும் என்பதால் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் இம்மாதிரியாக அபராதங்கள் விதிப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்போதெல்லாம் ஆட்டோ ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என்று கூறி அபராதம் போடுவதாகவும் கூறுகின்றனர்.
மேலும், 100 ரூபாய் அபராதமென்றால் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்னும் நோக்கத்திலும், சாமானிய மக்களிடம் அபராதம் விதித்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்னும் மனோபாவத்திலும் அபராதம் விதிக்கும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Isha Foundation: ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான அழைப்பாணை - ரத்துசெய்ய மறுத்த நீதிமன்றம்