சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுண்டக்காட்டைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு வயது 70. இவர் நேற்று இரவு கிராமத்தில் உள்ள தெரு நாயை தனது துப்பாக்கியால் சுட்டதில் நாய் துடிதுடித்து உயிரிழந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் அன்னபூரணிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அன்னபூரணி கண்டவராயன்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் ராமசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்துள்ளவர்களை கண்டறிய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.