ETV Bharat / state

எந்த பொருளை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது விலைவாசி உயர்வு குறித்து ப சிதம்பரம் கிண்டல் - sivagangai

பொதுவாக மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும் என்றும் ஆனால் தற்போது எந்த பொருளை தொட்டாலும் ஷாக் அடிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்தார்

எந்த பொருளை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது விலைவாசி உயர்வு குறித்து ப சிதம்பரம் கிண்டல்

author img

By

Published : Aug 13, 2022, 12:10 PM IST

சிவகங்கை: காங்கிரஸ் சார்பில் 75வது சுதந்திரதினத்தையொட்டி நடந்த பாதயாத்திரையில் பங்கேற்ற ப.சிதம்பரம் பேசியதாவது, இந்த பாதயாத்திரை 75வது சுதந்திர தினத்தை வலியுறுத்தியும், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, வேலையில்லாத திண்டாட்டம் குறித்து மக்களிடம் கொண்டு செல்லவும், மத்திய அரசை கண்டித்தும் நடக்கிறது.

நாட்டின் மொத்த விலைவாசி உயர்வு 15 சதவீதம், சில்லறை விலைவாசி உயர்வு 7 சதவீதம். பொதுவாக மின்சாரத்தை தொட்டால் தான் ‘ஷாக்’ அடிக்கும். ஆனால் தற்போது எந்த பொருளை தொட்டாலும் ‘ஷாக்’ அடிக்கிறது.
ஏழை, எளிய மக்கள் எந்தளவிற்கு துன்பப்படுகின்றனர் என்பதை தெருவில் நடந்தால் தெரியும்.

தற்போது மொத்த வேலையின்மை 8 சதவீதத்தை தாண்டியுள்ளது. 50 லட்சம் பெண்கள் வேலை தேடுவதையே நிறுத்திவிட்டனர். 18 முதல் 25 வயதுள்ள இளைஞர்களின் வேலையின்மை 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. பல்லாயிரம் சிறு, குறு நிறுவனங்களை மூடிவிட்டனர். 5,000 நிறுவனங்கள் இருந்த நகரில் தற்போது 500 நிறுவனங்கள் தான் உள்ளன. பல கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

எந்த பொருளை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது விலைவாசி உயர்வு குறித்து ப சிதம்பரம் கிண்டல்

வேலையின்மைக்கு பாஜகவும், மோடியும் தான் காரணம். இதில் எங்களுக்கு பொறுப்பு இல்லையென பாஜக தப்பியோட முடியாது, என்றார். எனது எம்பி தொகுதி மேம்பாடு நிதி ரூ.1.13 கோடி மூலம் 2 திட்டங்களை மேற்கொள்ள உள்ளேன். அதில் சிவகங்கை, மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 20 அரசு பள்ளி நூலகங்கள் மேம்படுத்தப்படும்.

இதற்காக தலா ரூ.2.75 லட்சம் வீதம் ரூ.55 லட்சம் வழங்கியுள்ளேன். மேலும் இந்த நூலகங்களுக்கு இனி மகாத்மா காந்தி நூலகம் என பெயரிடப்படும். இதுதவிர சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.58 லட்சம் வழங்கியுள்ளேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: தேவகோட்டை முனீஸ்வரர் கோயிலில் ஆடி மாதத்திருவிழா நடத்த அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.