தேவக்கோட்டையில் உள்ள வானவில் ஷாப்பிங்க் சென்டர், மெட் ப்ளஸ் மருந்தகம், டீக்கடை, செக்காலையில் உள்ள அரிசிக்கடை ஆகியவற்றில் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு பணம் மட்டும் திருடப்பட்டிருந்தது.தேவக்கோட்டை , காரைக்குடி ஆகிய இரு ஊர்களில் அடுத்தடுத்த நாட்களில் இச்சம்பவம் நடைப்பெற்றிருந்தாலும், சம்பவம் ஒரே மாதிரியாக நடந்ததால் எஸ்.ஐ. மீனாட்சி சுந்தரம் தலைமையிலான தேவக்கோட்டைக் குற்றப்பிரிவுப் காவல்துறையினர் CCTV காட்சியை வைத்து தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர் .
CCTV காட்சியில் இருந்தவர்கள் வெளி மாநிலத்தினர் என்பதால், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் யார் தங்கி உள்ளனர் என தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளில் போலீசார் சோதனை செய்தனர்.