சிவகங்கை மாவட்டம் கல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தனது வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கு இலை, தழை பறிக்க வீட்டின் அருகே இருக்கும் மரத்தின் மீது ஏறினார். அப்போது மரத்தின் அருகே புதியதாக அமைக்கப்பட்ட உயர்மின் அழுத்த மின்சார கம்பி ராதாகிருஷ்ணன் மீது உரசியது. இதில் பலியான ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து மரக்கிளையில் தொங்கினார்.
பின் இதனைக் கண்ட உறவினர்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பின், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து ராதாகிருஷ்ணனின் சடலத்தை மீட்டனர்.
இந்த சம்பவத்திற்கு மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் என்று குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை சிங்கம்புணரி வட்டாட்சியர் பஞ்சவர்ணம் சமரசம் செய்து வைத்தார்.
இச்சம்பவம் குறித்து எஸ்.எஸ் கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான சில நாட்களே ஆன நிலையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.