ETV Bharat / sports

பாலினத்தை மறைத்து பதக்கம் வென்றாரா இமானே கெலிப்! மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்! பதக்கம் திரும்பப் பெறப்படுமா? - BOXER IMANE KHELIF MEDICAL REPORT

பாரீஸ் ஒலிம்பிக்கில் பாலின சர்ச்சையில் சிக்கி தங்கம் வென்ற அல்ஜீரியா குத்துச் சண்டை வீராங்கனை இமானே கெலிப் ஆண் என்பது குறித்த மருத்துவ அறிக்கை வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Etv Bharat
Imane Khelif (Getty Images)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 5, 2024, 1:21 PM IST

ஐதராபாத்: அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பிரிவில் அல்ஜீரியா குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிப் தங்கம் வென்றார். முன்னதாக அவர் பெண் அல்ல என்றும் ஆணுக்கான குணாதிசயங்களை கொண்டு இருப்பதாகவும் சக வீராங்கனை அளித்த புகார் சர்ச்சையை கிளப்பியது.

இருப்பினும், அவர் தொடர்ந்து விளையாட சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்த நிலையில், பெண்களுக்கான 66 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார். இந்நிலையில், இமானே கெலிப் ஆண் என்பது குறித்த அதிர்ச்சிகர மருத்துவ அறிக்கை வெளியாகி புது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் Djaffar Ait Aoudia என்பவர், இமானே கெலிப் மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அண்டஹ் அறிக்கையில் ஆண்களுக்கான விரைப்பை மற்றும் எக்ஸ் ஒய் க்ரோமோசோம் உள்ளிட்ட மரபியல் ரீதியலான மாற்றங்கள் இமானே கெலிப் உடலில் இருந்து கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இமானே கெலிப் 5 ஆல்பா ரிடக்டேஸ் பற்றாக்குறை எனப்படும் ஒருவித மரபியல் பிரச்சினையுடன் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. பாரீசில் உள்ள கிரெம்ளின் பைசெட்ரே மருத்துவமனை மற்றும் அல்ஜீரியாவில் உள்ள மொஹமட் லாமைன் டெபாகைன் மருத்துவமனையின் நிபுணர்களால் கடந்த 2023ஆம் ஆண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த அறிக்கையில், இமானே கெலிப்பின் உயிரியல் பண்புகள், மற்றும் கருப்பை குறித்தும் முழுமையாக விவரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இமானே கெலிப் உடலில் எக்ஸ் ஒய் க்ரோமோசோம்கள் இருப்பதாகவும், ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தங்க பதக்கத்திற்கான போட்டியில் இருந்து சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம், இமானே கெலிப்பை தடை செய்தது. இருப்பினும், பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் பரிந்துரைகளை ஏற்காத காரணத்தால் இமானே கெலிப் 66 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் பங்கேற்று தங்கம் பதக்கம் வென்றார்.

குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிப் தொடர்பான மருத்துவ அறிக்கை வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், அவரிடம் உள்ள ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை பறிக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி குறிவைக்கும் டாப் 6 வீரர்கள்! 2 தமிழக வீரர்கள் தான் ஹாட்ஸ்பாட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.