சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று துவங்குகிறது. இந்த போட்டி இன்று மாலை துவங்கி வருகிற 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டி தொடர் 7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் நடத்தப்பட உள்ளது.
போட்டி சிறப்பு: மேலும் அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் இடம் பெற்ற உள்ளனர். இந்த தொடரில் நடந்து முடிந்த ஒலிம்பியாட் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் இடம்பெற்ற வீரர், வீராங்கனைகளான அர்ஜுன் ஏரிகேசி, விதித் குஜராத்தி, ஹரிகா துரோனவல்லி, வைஷாலி மற்றும் அரவிந்த் சிதம்பரம் ஆகிய பல நட்சத்திரங்கள் பங்கேற்று விளையாட உள்ளனர்.
Ready for a quick chess challenge? ♟️ Which piece rules the board with the most freedom? Comment your answer!
— Sports Tamil Nadu (@SportsTN_) November 5, 2024
.
.
.
.#Chennaigrandmasters #SDAT #SportsTN @CMOTamilnadu @Udhaystalin @TNDIPRNEWS @ChessbaseIndia @mgd1_esports @Chennai_GM pic.twitter.com/Y1UwcPPnh8
இதையும் படிங்க: மீன் பிடிக்கச் செல்லும்போது தவறி விழுந்த மீனவர்.. தேடும் பணி தீவிரம்!
போட்டி பரிசு: இந்த தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.15 லட்சமும், சேலஞ்சர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.6 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளன. மேலும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள Fide candidates தொடருக்கு தகுதி பெற ஒரு அற்புதமான வாய்ப்பாக அமைய உள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்