ETV Bharat / state

‘இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் தோன்றுகிறது’ - ஸ்டாலின் பேட்டி!

சிவகங்கை: இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் தோன்றுகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
author img

By

Published : Sep 27, 2019, 3:06 PM IST

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை திமுக தலைவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன், மதுரை மக்களவை உறுப்பினர் சு. செங்கடேசன், திமுக முன்னாள் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

மு.க. ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழரின் வரலாற்றுப் பெருமையை பறைசாற்றும் விதமாக கீழடி அமைந்துள்ளதாகவும் அதனை அகழாய்வு செய்துவரும் தமிழ்நாடு அரசுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதேபோல், கீழடி பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்துதான் தோன்றுகிறது என உறுதிபட தெரிவித்தார்.

இதையும் படிங்க: கீழடியில் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு!

Intro:Body:

இந்தியாவின் வரலாறு கீழடியில் இருந்து தான் தொடங்குகிறது என்பது கீழடி அகழ்வாராய்ச்சி எடுத்து உரைக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "தமிழர்களின் வரலாற்று பெருமையை பறைசாற்றும் விதமாக கீழடி உள்ளது, ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக கீழடி உள்ளது, கீழடி அகழ்வாராய்ச்சி மேற்க் கொள்ளும் தமிழக அரசுக்கு பாராட்டு, கீழடியில் மத்திய - மாநில அரசுகள் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும், கீழடி பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும், கீழடிக்கு பின்னால் அகழ்வாராய்ச்சி செய்த பல்வேறு இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொடர வேண்டும், இந்தியாவின் வரலாறு மேற்க்கில் இருந்து தான் தொடங்குகிறது என பல அறிஞர்கள் சொன்னார்கள், ஆனால் கீழடியை பார்க்கும் பொழுது, இந்தியாவின் வரலாறு தமிழகத்தில் கீழடியில் இருந்து தொடங்குகிறது" என கூறினார்...

தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும்’- மு.க.ஸ்டாலின் | @mkstalin #Keeladi

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.