நாடு முழுவதும் கரோனா பரவல் இரண்டாவது அலை நோய் தொற்று அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் தொற்று அதிகரித்து வருகிறது. தொற்றால் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை படுக்கைகள் முழுவதும் நிரம்பியுள்ளது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை கடுமையாகப் போராடி வருகிறது.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி, மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள்,மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி, காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் மாங்குடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: டாக் டே புயலில் காணாமல் போன மயானம்: இன்னும் என்னவேல்லாம் நடக்கப் போகிறதோ?