சிவகங்கை: திருப்பத்தூரில் உள்ள மாமன்னர் மருதுசகோதரர்களின் நினைவு மண்டபத்தில் 220 ஆவது ஆண்டு குருபூஜை விழா அரசு விழாவாக இன்று (அக்.24) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் மதுசூதன் நினைவு மண்டபத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணமடைந்த மருதுசகோதரர்களின் குருபூஜை விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர்களில் தேசியக் கொடியேற்றி நினைவுநாள் கொண்டாடப்படும் பெருமைகுரியவர்கள் மருது சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆறாவது மெகா கரோனா தடுப்பூசி முகாம்; 22.33 லட்சம் பேருக்கு தடுப்பூசி!