ETV Bharat / state

கொள்ளையடித்த சிலைகளை கோயில் வாசலில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்! - மானாமதுரை

சிவகங்கை: மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் கடந்த மாதம் காணாமல் போன சிலைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் வாசலில் போட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியினரிடயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை
author img

By

Published : Jul 26, 2019, 4:27 PM IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான கரியமாணிக்க பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த மாதம் 19ஆம் தேதியன்று கோயிலின் கதவு உடைக்கப்பட்டு ரூ.4 லட்சம் மதிப்புள்ள சமேத கரியமாணிக்க பெருமாள் சிலை, ஸ்ரீ தேவி, பூ தேவி ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகள், அந்த சிலைகளின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

இதையடுத்து கோயிலின் நிர்வாகி ஸ்ரீனிவாசன் அளித்த புகாரை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர்.

கொள்ளையடித்து சென்ற சிலைகளை கோயில் வாசலில் போட்டுசென்ற கொள்ளையர்கள்

இந்நிலையில், கொள்ளையடித்து செல்லப்பட்ட ஐம்பொன் சிலைகளை இன்று காலை கோயில் வாசலில் கொள்ளையர்கள் போட்டுச் சென்றனர். ஆனால் சிலையின் கழுத்தில் கிடந்த தங்க நகைகள் மட்டும் இல்லாமல் இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஜூலை.26

மானாமதுரை அருகே மாயமான ஐம்பொன் சிலைகள் மீட்பு!

கோயில் வாசலில் சிலைகளை போட்டுச் சென்ற கொள்ளையர்கள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காணாமல் போன ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

Body:மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான கரியமாணிக்க பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோவில் அர்ச்சகர் ஸ்ரீனிவாசன் கடந்த மாதம் 19ம் தேதி காலை வழக்கம் போல் பூஜை செய்ய வந்தபோது, கோவிலின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது,கோவிலின் உள்ளே இருந்த 4 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ எடையுள்ள சமேத கரியமாணிக்க பெருமாள் சாமி சிலை மற்றும் 20 கிலோ எடையுள்ள ஸ்ரீ தேவி, பூதேவி, ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகளும் மற்றும் ஸ்ரீ தேவி, பூ தேவி சாமி சிலையின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியையும் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இடைக்காட்டூர் கிராமத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட 3 அடி உயரமுள்ள மூன்று ஐம்பொன் சாமி சிலைகளையும் திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து கோவிலின் நிர்வாகி ஸ்ரீனிவாசன் அளித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐம்பொன் சிலைகளை திருடிச்சென்ற குற்றவாளிகளை தேடி வந்தனர்.

Conclusion:இந்நிலையில் இன்று காலை மீண்டும் கோயில் வாசலில் திருடுபோன சிலைகளை மர்ம நபர்கள் வைத்து சென்றுள்ளனர். ஆனால் சுவாமி கழுத்தில் கிடந்த தங்கநகைகள் மட்டும் மாயமாகி இருந்தது. சிலைகள் மீண்டும் கோயில் வாசலில் கிடந்ததை அடுத்து மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.