சிவகங்கை வாணியங்குடியைச் சேர்ந்தவர்கள் நவீன் (19), ஈஸ்வரன் (18), மகேஷ்குமார். மூவரும் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் வேலைபார்த்து வந்தனர். இந்நிலையில் மூவரும் திருப்புவனம் சென்றுவிட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் சிவகங்கை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
சிவகங்கை - மதுரை நெடுஞ்சாலையில் நல்லாகுளம் விலக்கு என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் இருசக்கர வாகனம் தூக்கிவீசப்பட்டு மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.