கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்திய மாநில தொல்லியல் துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று கட்ட அகழாய்வில் இந்திய தொல்லியல் துறையும் நான்கு, ஐந்தாம் கட்ட ஆய்வில் தமிழ்நாடு தொல்லியல் துறையும் ஈடுபட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி தமிழ்நாடு தொல்லியல் துறை ஆறாம் கட்ட ஆய்வினை இங்கு மேற்கொண்டு வருகிறது. இந்த முறை கீழடி மட்டுமின்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய கீழடியை சுற்றியுள்ள பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து கட்ட அகழாய்வுகளிலும் உறைகிணறுகள் கண்டெடுக்கப்பட்டன.
ஆறாம் கட்டமாக நடைபெறும் ஆய்வில் இதுவரை உறைகிணறுகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், தற்போது முதல் முதலாக அகரம் பகுதியில் நடைபெற்று வருகின்ற அகழாய்வில் கண்டறியப்பட்டது ஏறக்குறைய மூன்று மீட்டர் ஆழத்தில் ஐந்தடுக்குகள் கொண்ட உறைகிணறு வெளியே தெரிய தொடங்கியது. மேலும், ஆழமாக தோண்டப்படும் போது அதன் முழு வடிவமும் தெரியவரும்.
சங்க இலக்கியங்களில் உறவினர்கள் குறித்த பல்வேறு பாடல்கள் காணப்படுகின்றன 'பறழ்ப்பன்றி பல்கோழி உறைக்கிணற்றுப் புறஞ்சேரி மேழகத் தகரொடு சிவல் விளையாட' என்று சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் இடம்பெற்ற பாடல் ஒன்று காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கல்வியில் அரசியலைக் கலக்க வேண்டாம் - இந்தியாவுக்கு சீனா பதில்