சிவகங்கை அருகே குமாரபட்டி கிராமத்தில் மந்தை கருப்பணசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கரோனா காரணமாக சில ஆண்டுகளாக நடக்காமல் இருந்த இக்கோவில் திருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது.
திருவிழாவின் ஒரு பகுதியாக, நேற்று (ஆக.7) அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்-சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை ஒன்றிணைந்து ஊர் நடுவே மந்தையிலுள்ள பொது சாவடியின் முன்பாக, முளைப்பாரிக்கு கும்மியடித்தனர். குறிப்பாக, இதில் ஊரிலுள்ள ஆண்கள் அனைவரும் கலந்துகொண்டு பாரம்பரிய முறைப்படி ஒயிலாட்டம் ஆடினர்.
திருவிழா தொடங்கிய தினம் முதல் திருவிழாவின் 9வது நாள் வரை கும்மிப்பாட்டு பாடியும், ஒயிலாட்டம் ஆடியும் வழிபாடு செய்து வெகு சிறப்பாக வழிபாடு நடத்தவுள்ளனர். திருவிழாவின் நிறைவு நாளில், முளைப்பாரிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்படும்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் சோழர் கால பார்வதி சிலை...மீட்கும் பணி தீவிரம்