சிவகங்கை: அல்லூர் கிராமத்தில் கருப்பையா சாமி கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரைவண்டி கைப்புறா பந்தயம் ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்றது.
இப்பந்தயத்தை திமுக மாவட்ட பிரதிநிதி அல்லூர் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரிய மாடு மற்றும் சிறிய மாடுகளுக்கு பந்தயத் தூரம் முறையே 7, 9 என நிர்ணயிக்கப்பட்டு அல்லூர் சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து குதிரைவண்டி பந்தயம் நடைபெற்றது. இது 8 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்றது. பின்னர் கைப்புறா என்ற வித்தியாசமான மாடுகளை இளைஞர்கள் பிடித்த வண்ணம் ஓடும் போட்டி நடைபெற்றது. இது 3 கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டது.
குதிரை வண்டி பந்தயத்தில் முதல் பரிசான ரூ.12 ஆயிரத்தை ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் பெயரில் விடப்பட்ட திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்த உதயஇளமதி என்பவரின் குதிரை தட்டிச் சென்றது. இதே போன்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசுத் தொகையான ரூ.10 ஆயிரத்தை நாட்டரசன் கோட்டையை சேர்ந்த ஆண்டி என்பவர் மாடும்.
2ஆவது பரிசு தொகையான ரூ.8,000-ஐ பல்லவராயன்பட்டியை சேர்ந்த சங்கீதா என்பவர் மாடும், சிறிய மாடுகளுக்கான பந்தயத்தில் முதல் பரிசுத் தொகையான ரூ.10 ஆயிரத்தை மதுரை மாவட்டம் அம்மாபொன்னு என்பவர் மாடும் இரண்டாவது பரிசு தொகை ரூ.8,000-ஐ நாட்டரசன் கோட்டையை சேர்ந்த ஆண்டி என்பவர் மாட்டின் உரிமையாளர்களும் பெற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த பந்தயத்தை சாலை இருபுறங்களிலும் இருந்து பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க:ஸ்ரீ மந்தகருப்பண்ண சுவாமி கோயில் திருவிழா