மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நீட் தேர்வைத் தமிழ்நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்ற தெளிவு திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு இருக்கிறது. மதவாத சக்திகளுக்கு ஆதரவான அரசாங்கம் மத்தியில் இருக்கிறது என்ற தைரியத்தில் தமிழ்நாட்டில் ஆணவ படுகொலை மற்றும் ஒரு குறிப்பிட்ட உணவை உண்டால் தாக்குதல் நடத்தப்படுகிறது. இது மதவாத சக்திகள் தலை தூக்கியுள்ளதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும். இது போன்ற சமூக விரோத செயல்களைக் காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் கூறுவதைப் போன்று தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றால் ஏன் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது? குடி தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுக்கு அறிவியல் ரீதியாகச் சிந்திக்க வேண்டும். முதற்கட்டமாகக் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இது குறித்து நாங்கள் மத்திய அமைச்சர்களைத் தொடர்ந்து சந்தித்து வலியுறுத்தி வருகிறோம்", என்று கூறினார்.