சிவகங்கை: ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய அரசு நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், " மூன்று மாநில தேர்தலைக் கண்டு அஞ்சியே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது" என்றார்.
பாதுகாப்பு அம்சங்கள் உள்பட அனைத்து விசயங்களிலும் மோடி அரசு தோல்வியடைந்துள்ளது என சுப்பிரமணிய சுவாமி ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருப்பது குறித்த கேள்விக்கு, " பாம்பிற்கு பால் ஊற்றி வளர்த்தால் என்ன செய்யும் எனத் தற்போது புரிந்திருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை