ETV Bharat / state

உலக நாடுகளின் அனைத்து துறைு உயர் பதவிகளில் இந்தியர்கள் உள்ளனர் - மாலத்தீவு கல்வித் துறை அமைச்சர் - சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஐக்யூ டியூப் என்ற கல்விக்கான திறன்பேசி செயலி மற்றும் இளையோர் ஐ.ஏ.எஸ். பயிற்சியகம் துவக்க விழா நடைபெற்றது.

மாலத்தீவு கல்வித் துறை அமைச்சர்
author img

By

Published : Feb 7, 2019, 11:45 PM IST

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஐக்யூ டியூப் என்ற கல்விக்கான திறன்பேசி செயலி மற்றும் இளையோர் ஐ.ஏ.எஸ். பயிற்சியகம் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாலத்தீவு அரசின் கல்வி இலாகா அமைச்சர் அப்துல் ரஸீத் அஹ்மத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாலத்தீவு கல்வித் துறை அமைச்சர் பேசுகையில், உலக நாடுகளில் உள்ள அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளில் இந்தியர்களே அதிக அளவில் பணிபுரித்து வருகின்றனர். கூகுல் நிறுவனத்தின் சி.இ.ஓ. கூட இந்தியர்தான் என்றார். மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ கல்வி, திறமை நேர்மறை எண்ணங்கள் மிகவும் அவசியம். ஒழுக்கம் இல்லாத கல்வி பயனற்றது என்றார். இந்திய நாட்டின் கலாச்சாரம், ஒருவருக்கு ஒருவர் மரியாதை செலுத்தி மதித்து வாழ்வதும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்தியாவை சிறந்த நாடாக உயர்த்த மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதாக வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியாவும் மாலத்தீவும் சிறந்த நண்பர்கள். மாலத்தீவிற்கு இந்தியா நிறைய உதவிகள் செய்து வருகிறது. வரும் காலத்தில் மாலத்தீவு பள்ளி மாணவர்களுக்கும் இந்திய மாணவர்களுக்கும் கல்வி பரிமாற்றங்கள் செய்வதற்கான முயற்சி எடுக்கப்படும். இந்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாலத்தீவு வரவும் மாலத்தீவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தியா வந்து கல்வி முறைகள் குறித்து கற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்.

undefined

இந்தியாவில் தமிழகம் கல்வித் தரத்தில் சிறந்து விளங்குகிறதாகவும் தமிழக மாணவர்கள் அறிவு ரீதியாகவும் கலை ரீதியாகவும் திறமை மிக்கர்களாக உள்ளனர் என்றும் புகழாரம் சூட்டினார்.

Intro:உலக நாடுகளின் அனைத்து துறைகளிலும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் இந்தியர்களே - மாலத்தீவு கல்வி இலாகா அமைச்சர் பேச்சு

சிவகங்கை: உலக நாடுகளின் அனைத்து துறைகளிலும் உயர் பதவிகளில் இந்தியர்களே அதிக அளவில் பணிபுரிகின்றனர் என்று மாலத்தீவின் கல்வி இலாகா அமைச்சர் அப்துல் ரஸீத் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

Body:சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் தனியார் பள்ளியில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஐக்யூடியூப் என்ற கல்விக்கான திறன்பேசி செயலி மற்றும் இளையோர் ஐ.ஏ.எஸ். பயிற்சியகம் துவக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாலத்தீவு அரசின் கல்வி இலாகா அமைச்சர் அப்துல் ரஸீத் அஹ்மத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாலத்தீவு கல்வி இலாகா அமைச்சர் பேசும்போது

உலக நாடுகளில் உள்ள அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளில் இந்தியர்களே அதிக அளவில் பணிபுரிகின்றனர். கூகுல் நிறுவனத்தின் சி.இ.ஓ. கூட இந்தியர்தான் என்றார்.

மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ கல்வி, திறமை மற்றும் நேர்மறை எண்ணங்கள் மிகவும் அவசியம். ஒழுக்கம் இல்லாத கல்வி பயனற்றது. இந்திய நாட்டின் கலாச்சாரம், ஒருவருக்கு ஒருவர் மரியாதை செலுத்தி மதித்து வாழ்வதும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தியாவை சிறந்த நாடாக உயர்த்த மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதாக வாழ்த்தினார்.

பின்னர் பேட்டியளிக்கையில்

இந்தியாவும் மாலத்தீவும் சிறந்த நண்பர்கள். மாலத்தீவிற்கு இந்தியா நிறைய உதவிகள் செய்து வருகிறது. வரும் காலத்தில் மாலத்தீவு பள்ளி மாணவர்களுக்கும் இந்திய மாணவர்களுக்கும் கல்வி பரிமாற்றங்கள் நிகழ முயற்சி செய்யப்படும். இந்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாலத்தீவு வரவும் மாலத்தீவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தியா வந்து கல்வி முறைகள் குறித்து கற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்.

இந்தியாவில் தமிழகம் கல்வித் தரத்தில் சிறந்து விளங்குகிறது. தமிழக மாணவர்கள் அறிவு ரீதியாகவும் கலை ரீதியாகவும் திறமை மிக்கர்களாக உள்ளனர் என்று புகழாரம் சூட்டினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.