இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை தப்பவைக்கும் வகையில், ஐ.நா.மன்றத்தில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவருவதைக் கைவிட வலியுறுத்தி, சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் ஐநாவின் தீர்மானத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், லண்டனில் வாழும் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் நடத்தி வரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், இந்தப் போராட்டத்தில் ஆதரவு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இளஞ்சென்னியன், கர்ணன், தமிழர் தேசியம் உள்பட எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க:'குற்றத்தடுப்பு காவல் படை உருவாக்கப்படும்' - சீமான் வாக்குறுதி