மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. சிவகங்கை தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா,
”
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது வேட்புமனுவில் எச்.பி.எஃப் (HPF) காலத்தில் (Coloumn) சரியாக விளக்கம் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினேன். எனவே மனுவை ஏற்க கூடாது என எனது எதிர்ப்பை தெரிவித்தேன். ஆனால் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை மக்கள் முன்பு விட்டுவிடுகிறேன்.
ஸ்டாலினின் திறமையின்மை தெரிந்தேதான் கலைஞர் தனது கடைசி காலம்வரை அவரை தலைவராக்கவில்லை. சினிமாத்துறையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்று சொன்னால் பாரதிராஜா என்ன ஆனார்” என்றார்.