ETV Bharat / state

கீழடி அகழாய்வில் படிகத்தால் ஆன எடைக்கல் கண்டெடுப்பு: தொல்லியல் ஆர்வலர்கள் வியப்பு!

கீழடியில் நடைபெற்று வரும் 9 ஆம் கட்ட அகழாய்வில் படிகத்தால் (கிரிஸ்டல் குவார்ட்ஸ்) ஆன அரிய வகை எடைக்கல் கண்டறியப்பட்டுள்ளது என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

keezhadi crystal quartz weighing stone
கீழடி அகழாய்வில் கிடைத்த படிகத்தால் ஆன எடைக்கல்
author img

By

Published : Aug 8, 2023, 1:07 PM IST

கீழடி அகழாய்வில் கிடைத்த படிகத்தால் ஆன எடைக்கல்

சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் அமைந்து உள்ள கீழடியில் தற்போது 9 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் மிக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. கீழடியில் 9 குழிகளும், கொந்தகையில் 5 குழிகளும் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை பானை ஓடுகள், எடைக்கற்கள், பாசிமணிகள் மனித எலும்புக்கூடுகள் உள்ளிட்ட பொருட்கள், கொந்தகை அகழாய்வில் கிடைத்து உள்ளன.

அகழாய்வுத் தொடர்பாக இன்று தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கீழடி அகழாய்வுப் பணியின்போது ஆய்வுக் குழியொன்றில் 175 செ.மீ ஆழத்தில் படிகக் கல்லால் ஆன எடைக் கல் ஒன்று வெளிக் கொணரப்பட்டு உள்ளது. அந்த எடைக்கல் சற்று கோள வடிவில், மேற்பகுதி மற்றும் அடிப்பகுதி தட்டையாக்கப்பட்டு பளபளப்பான மேற்பரப்புடன் ஒளிபுகும் தன்மையுடன் காணப்படுகிறது.

மேலும் இந்த கல் 2 செ.மீ விட்டமும், 1.5 செ.மீ உயரமும் 8 கிராம் எடையுடனும் உள்ளது. இந்த எடைக்கல்லுடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு, சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்புப்பூச்சுப் பெற்ற பானை ஓடுகள் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு அருங்காட்சியக மதுரை காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன் கூறுகையில், "சங்க இலக்கியங்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து செய்யுள் பாடலின் 6 ஆம் பத்தில் 'வான் பளிங்கு விரலாய் செம் பரல் முரம்பின்இலங்கு கதிர்த்திருமேனி பெறூஉம்' என்ற பாடலில் கிறிஸ்டல் குவார்ட்ஸ் கற்கள் குறித்து பாடப்பட்டு உள்ளது. சேர நாட்டில் இதுபோன்ற பளிங்கு கற்கள் நிறைய உள்ளன.

கொடுமணல் அகழாய்வில் குவார்ட்ஸ் கற்களில் செய்யப்பட்ட பாசிமணிகள் நிறைய கிடைத்து உள்ளன என்பதை தொல்லியல் அறிஞர் ராஜன் பதிவு செய்து உள்ளார். சேர நாட்டில் மிகுதியாக கிடைத்து வரும் பளிங்கு கற்கள் குறித்து சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து பாடலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் பளிங்குக் கல்லால் ஆன எடைக்கல் என்பது நான் இதுவரைக்கும் அறிந்ததில்லை. கீழடி அகழாய்வில் இது ஒரு குறிப்பிடத் தகுந்த கண்டுபிடிப்பாகும்" என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் சிலரிடம் பேசியபோது, "பளிங்குக் கல்லால் ஆன எடைக்கல் தற்போது முதன் முறையாக கீழடி அகழாய்வில் கிடைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தொல்லியல் துறையின் அகழாய்வில் இதனை ஒரு மைல்கல் எனலாம். வழக்கமாக வெறும் கற்களால் ஆன எடைக்கற்களே மிகுதியாகக் கிடைத்துவரும் நிலையில், கிறிஸ்டல் குவார்ட்ஸ் எடைக்கல் வியப்பிற்குரியதுதான்" என்றனர்.

இதையும் படிங்க: வத்தலக்குண்டு அருகே அரசு பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு: அதிரடியாக மீட்ட பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.