இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கின்ற மக்களவைத்தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் திருநெல்வேலி மாவட்டத்தில் 33 பறக்கும் படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள கூட்டுறவுபட்டி கிராமத்தில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள், வட்டாட்சியர் சேகர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒக்குப்பட்டியைச் சேர்ந்த பால்முகவர் முத்தழகு என்பவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணமின்றி 1.74 லட்சம் பணம் கொண்டு செல்வது தெரியவந்தது.
அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அலுவலர்கள் அதனை சிவகங்கை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.