சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கூட்டுறவு சங்கங்களின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் நடைபெற்ற ஊழலை தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ’சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு வழங்குவதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. இதனை தட்டிக்கேட்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அவல நிலை நிலவுகிறது.
தமிழ்நாட்டு மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவையும், பாஜகவையும் மோசமான தோல்வியை பெற செய்தனர். விவசாயிகள் பணத்தை முழுவதுமாக விழுங்கிய கட்சி பாஜக. எனவே இன்னும் ஒன்றரை வருடத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அமைச்சர் ஒருவர்கூட வெற்றியும் டெபாசிட்டும் பெற முடியாது என்று தெரிவித்தார்.