சிவகங்கை ஆனந்த்
ஏப்ரல்.13
காங்கிரஸ் அரசு அமைந்தால் மின்னணு வாக்கு இயந்திரத்தில் சீர்திருத்தம் செய்யப்படும் - ப.சிதம்பரம்
சிவகங்கை: காங்கிரஸ் அரசு அமைந்தால் மின்னணு வாக்கு இயந்திரத்தில் சீர்திருத்தம் செய்யப்படும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
நீட் தேர்வில் மாநில மக்களின் விருப்பத்தை பொறுத்துத்தான் நடைமுறைபடுத்தப்படும் எனவும், தமிழகத்தில் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என ராகுல் உறுதியாக கூறியுள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தாகாது என பாஜக அமைச்சர் ப்யூஸ் கோயலே கூறியிருப்பதால் எங்களது வெற்றி உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். காங்கிரஸ் ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்கும் என்றும், பாஜகவின் ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்றவர் கடந்த 20 மாதங்களில் 0.1% விகிதம் உற்பத்தி சரிந்துள்ளது என்றும், இரண்டு ஆண்டுகளில் இது போன்ற சரிவு ஏற்பட்டதில்லை என்றும், இன்னும் 2, 3 மாதங்களில் இது கூடுதலாகும் எனவும் கருத்து தெரிவித்தார்.
இந்தியாவின் நேரடி வருமானம் 50,000 கோடி ரூபாய் வரி விதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தவர் இது ஆளும் பாஜக அரசின் நிர்வாகத்திறமையை வெளிப்படுத்துகிறது என்றும் கூறினார்.
தங்கள் அரசிற்கு பின் பேரழிவு ஏற்பட்டால் கூட பரவாயில்லை என கருதுபவர் மோடி என்றவர், காங்கிரஸ் ஆட்சி அமைத்தால்
சராசரி குடும்பத்தினர் மீதுவரிச்சுமை விதிக்கமாட்டோம் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
மின்னணு வாக்கு எந்திரத்தில் சிறு, சிறு கோளாறுகள் இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது என்றும் அதனை எவரும் கண்டுகொள்வதில்லை என்றவர்
காங்கிரஸ் அரசு அமைந்தால் மின்னணு வாக்கு இயந்திரத்தில் சீர்திருத்தம் செய்யப்படும் என்றும் கூறினார்.
பாஜக 2014 தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையையே மீண்டும் புதிதாக்கி அதையே 2019 தேர்தலிலும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 2014 தேர்தலில் சொன்ன எதையும் பா.ஜ.க செய்யவில்லை என்றவர், நதி நீர் பிரச்சனையில்,
ஒரே மார்ககமாக ஓடும் நதி நீர்களை இணைப்பது என்பது சாத்தியம். ஆனால் அனைத்து நதி நீர் இணைப்பு என்பது சாத்தியமில்லை என்றார்.
மேலும் 40 தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும்,
545 தொகுதியில் தேர்தல் நடக்கிறது. ஆனால்
எதிர்கட்சிக்காரர்களை நோக்கித்தான் வருமான வரித்துறை ஏவிவிடப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகாரர்கள் மட்டும் வசதி படைத்தவர்களாக சித்தரிக்கும் ஆளும் கட்சிக்காரர்கள் , அவர்கள் பஞ்ச பரதேசிகளாக உள்ளதால் வருமான வரித்துறையினர் கைப்பற்றும் பணத்தை அவர்களுக்கு தேர்தல் செலவிற்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள் எனவும் கிண்டலடித்தார்.
மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆதரிக்கும் மோடியை இந்திய மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.