ETV Bharat / state

ஊரடங்கு: உணவின்றி பட்டினியால் முதியவர் உயிரிழப்பு? - elderly person died of starvation

சிவகங்கை: திருப்புவனம் அருகே உணவின்றி பட்டினியால் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியான தகவலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

elderly person died of starvation near Thirupuvam

author img

By

Published : Apr 13, 2020, 11:48 AM IST

சிவகங்கை மாவட்டம், மதுரை பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் ஆதரவற்றோர், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் என பலரும் தங்கியுள்ளனர். வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இவர்களை, உறவினர்கள் பலர் வாகனங்களில் இங்கு கொண்டுவந்து விட்டுச் செல்கின்றனர்.

தங்களைப் பற்றிய எந்த விபரங்களையும் கூறத் தெரியாத இவர்களின் மேல் பரிதாபப்பட்டு இவ்வழியே செல்லும் பலரும் உணவு, தண்ணீர் கொடுப்பது வழக்கமாக இருந்துவந்தது.

தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டதையடுத்து பேருந்து நிறுத்தங்களுக்கு யாரும் வருகை தருவதில்லை.

இந்நிலையில், திருப்புவனம் அருகே சக்குடி விலக்கு பேருந்து நிறுத்தத்தில் தங்கியிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்துள்ளார். இவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், உணவின்றி பட்டினியால் தவித்துவந்ததாலே இவர் மரணித்திருக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க: 'கரோனாவுக்கு 308 நபர்கள் உயிரிழப்பு' - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.