ETV Bharat / state

விடுமுறை நாட்களில் மதுக்கூடங்களாக மாறும் அரசு அலுவலகங்கள் - வைரலாகும் வீடியோ! - sivagangai

சிவகங்கை: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் விடுமுறை நாட்களில் சிலர் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

drunken
author img

By

Published : Jul 28, 2019, 7:20 PM IST

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. இந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகத்திற்குள்ளேயே அமர்ந்து மது அருந்துவதாக ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கையில் மது பாட்டில்களுடன் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசு அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்கள்

அரசு அலுவலகங்களே மதுபானம் அருந்தும் பாராக மாறிவருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஜூலை.28

விடுமுறை நாட்களில் மதுக்கூடங்களாக மாறும் அரசு அலுவலகங்கள் - வைரலாகும் வீடியோ!

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் சிலர் விடுமுறை நாட்களில் மதுபானம் அருந்தும் பாராக மாறிவரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது சம்பந்தமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Body:சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கிவருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகத்திற்குள்ளேயே அமர்ந்து மது அருந்துவதாக ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

இந்நிலையில் தற்சமயம் அதே வளாகத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கையில் பீர் பாட்டில்களுடன் மது அருந்தும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அரசு அலுவலகங்களே மதுபானம் அருந்தும் பாராக மாறிவருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.