சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தமிழர்களின் நாகரிகத்தையும் தமிழின் தொன்மையையும் உலகிற்கு எடுத்தியம்பும்விதமாக பல்வேறு பழங்கால பொருட்கள் நாள்தோறும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த இடத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என ஆளும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வலியுறுத்திவருகின்றன. அதற்கான பணிகளும் நடைபெற்றுவருவதாக தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜனும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவரும் இடத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், தொல்லியல் துறை உதவி இயக்குநர் சிவானந்தம், கீழடி அகழாய்வு பொறுப்பாளர் ஆசைத்தம்பி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கீழடி அகழாய்வு: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்