சிவகங்கை: காளையார்கோவிலை அடுத்து உள்ள கொல்லங்குடியைச் சேர்ந்தவர்கள் ராமநாதன் - கலைச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
ராமநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் மூத்த மகனான மாற்றுத்திறனாளி ஆனந்தன் தனது குடும்ப பாரம் முழுவதையும் ஏற்று நடத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்.
மாற்றுத்திறனாளி என்று மனம் தளராமல் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகள் நடைமுறையில் இருந்தபோது லாட்டரி சீட்டு விற்று தனது குடும்பத்தை கவனித்துவந்தார்.
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டை அரசு தடைசெய்தபின் என்ன செய்வது என்று தவித்தபோது ஆனந்தனுக்கு உதித்த புதிய வழிதான் பேருந்துகளில் பேனா போன்ற பொருள்களை விற்பது, அதன்படி பேனா விற்பனையைத் தொடங்கினார்.
அதன்மூலம் தனது இரு தங்கைகளில் ஒருவரை பட்டதாரியாக்கி தனது தங்கைகளுக்கு திருமணம் செய்துவைத்துள்ளார். தன்னம்பிக்கையுடன் தனது சொந்தக் காலில் நின்று தனது குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார் ஆனந்தன்.
இதையும் படிங்க: தன்னம்பிக்கை தளராத திருநங்கையின் செம்ம டேஸ்ட் தேநீர் கடை!