சிவகங்கை: இளையான்குடி அருகே உலகமணியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர், காளிமுத்து. இவரது மகன் திவின், உக்ரைன் கார்கிவில் நேஷனல் ஏரோஸ்பேஸ் வின்டர்ஸ் டேவில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
உக்ரைனில் தவிப்பு
அதேபோல், அவரது மகள் வேகா கார்கிவில் நேஷனல் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் சாப்பாட்டிற்குக் கூட கஷ்டப்பட்டு வருவதாகக் காணொலி மூலம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தங்களது பிள்ளைகளை உக்ரைனிலிருந்து மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டியிடம் அவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய 21 தமிழ்நாட்டு மாணவர்கள்!