ETV Bharat / state

'கரோனா பாதிப்பை பயன்படுத்தி கல்லாக்கட்டும் காரைக்குடி உணவகம்' - corona virus remedy

சிவகங்கை: கரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இங்கு சமைக்கப்படும் ‘சின்ன வெங்காய ஊத்தப்பம்’ சாப்பிடுங்கள் என்று தனியார் உணவகம் ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

corona virus
corona virus
author img

By

Published : Feb 2, 2020, 11:19 PM IST

Updated : Mar 17, 2020, 5:37 PM IST

கரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் இருந்துவருகின்றனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை சாலையில் அமைந்துள்ள ‘ஹோட்டல் நியூ பிரசிடெண்ட்’ என்ற தனியார் சைவ உணவகத்தில், சின்ன வெங்காயத்தால் செய்யப்பட்ட ஊத்தாப்பம் சாப்பிட்டால் கரோனா வைரஸ் தாக்காது என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் - வெங்காய தோசை வைத்தியம்!

இதுகுறித்து செல்வகுமார் என்பவர் கூறுகையில், தான் சீனா சென்று திரும்பியதாகவும், தனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் இந்த உணவகத்தின் உரிமையாளரிடம் பேசியபோது, அவர் சின்ன வெங்காய ஊத்தாப்பத்தை பரிந்துரைத்தாகவும் கூறினார்.

மேலும், இந்த உணவகத்தின் உரிமையாளர் இதுதொடர்பாகக் கூறுகையில், சின்ன வெங்காயம் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி கூடும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளதாகவும், கரோனா வைரஸ் பாதிப்பு வராது என்பதால், விழிப்புணர்விற்காக விளம்பரப் பலகை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் நோய்க்கு உலக சுகாதார நிறுவனம் முதல், சர்வதேச மருத்துவர்கள் வரை சரியான மருந்து கிடைக்காமல் தவித்துவரும் நிலையில், காரைக்குடி ஹோட்டல்காரரின் இந்த வியாபார யுக்தி பொதுமக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் - பலி எண்ணிக்கை 304ஆக உயர்வு!

Last Updated : Mar 17, 2020, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.