நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் 13 ஆயிரத்து 933 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை, இதுவரை 8 ஆயிரத்து 441 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 130 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தின் தனியார் மருத்துவனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டன. இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அரசு மருத்துவமனைகளிலும் இடப்பற்றாக்குறை ஏற்படும்.
பொதுமக்கள் போதிய விழிப்புடன் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிய வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.