சிவகங்கை: தேவகோட்டை காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் கார்த்தி சிதம்பரம் எம்பி தலைமையில் நடைபெற்றது. இதில், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், மாங்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர். ராமசாமி, தேவகோட்டை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முன்னாள் எம்.எல்.ஏ கே.ஆர். ராமசாமி ஆதரவாளர்கள், தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக உடைந்து கிடக்கிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர். ராமசாமி அவரை சமாதனம் செய்ய முயன்றார். ஆனால், அதற்குள் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வாக்குதம் செய்யத் தொடங்கினர். பின்னர், வாக்குவாதம் கைகலப்பாக மாறி அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் ஆலோசனைக் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
இதையும் படிங்க: அதிமுகவினர் இடையே கோஷ்டி மோதல் - விருதுநகரில் பரபரப்பு