சிவகங்கை: பாஜகவின் மூத்த தலைவரான ஹெச்.ராஜா கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி தனது ட்விட்டர் பதிவில், "தங்கள் வீட்டில் ஒரு நாய் வளர்த்து வந்த நிலையில் அந்த நாய் வெறி பிடித்து தனது கால்நடைகளை கடித்து குதற தொடங்கியது அதனால் நாய் பிடிப்பவரிடம் கூறிய போது அதனை அவர் அடித்து கொன்றதாகவும், அது தமக்கு வருத்தமளிப்பதாகவும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த பதிவு குறித்து டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் விலங்குகள் நல வாரியத்தில் மெயில் மூலம் புகார் அளித்துள்ளார். பின்னர், விலங்குகள் நல வாரியம் இந்த சம்பவம் குறித்து சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் உரிய விசாரனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
![ஹெச் ராஜாவின் ட்விட்டர் பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16591982_h.jpg)
இந்நிலையில் ஆட்சியர் அது குறித்து விசாரனை செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து ஹெச்.ராஜாவிடம் கேட்டதற்கு, ”இந்து மதம் குறித்து தவறாக பேசி வருபவர்களுக்கு தனது பானியில் பதில் விடுத்து அந்த பதிவை செய்ததாகவும், வேறேதும் அதுபோல் சம்பவம் நடக்கவில்லை என்று தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
இதையும் படிங்க: அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது