சிவகங்கை: பொதுவாக சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கை ஒரு நாடோடி வாழ்க்கை. நிலையான ஒரு இடம் இல்லாத அவர்கள், சர்க்கஸ்காக போகும் இடங்களில் கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த எம்.வளையபட்டி கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் குடும்பத்தினருடன் கூடாரம் அமைத்து வாழ்ந்து வந்தனர்.
இதையடுத்து சிங்கம்புணரி அருகேயுள்ள அரசு நிலத்தில், அரசின் அங்கிகாரமின்றி கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர்.
நிலம் இருந்தும் கூடாரம் தான்
இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, இக்கலைஞர்களுக்கு, திருப்பத்தூர் அருகாமையில் உள்ள அரசு நிலத்தில் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கியுள்ளார்.
அனால் சர்க்கஸ் கலைஞர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால், வீடுகள் கட்ட வசதியின்றி, கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் அடிப்படை வசதிகளான வீடு, மின்சாரம், குடிதண்ணீர், கழிவறை என எதுவும் இல்லாமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மின்சாரம் இல்லாமல் இருப்பதால் விஷப்பூச்சிகள் தீண்டும் உயிர் பயத்தில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே அடிப்படை வசதிகளான வீடு, குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்டவைகளை தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லையில் ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்