ETV Bharat / state

நவராத்திரி பண்டிகை: உரிய விலையின்றி வாழை விவசாயிகள் ஏமாற்றம்!

நவராத்திரி பண்டிகைகளை நம்பி வாழை பயிரிட்ட விவசாயிகள், இலைகள், வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர்.

வாழை விவசாயிகள் ஏமாற்றம்
வாழை விவசாயிகள் ஏமாற்றம்
author img

By

Published : Oct 13, 2021, 9:36 PM IST

சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள மலம்பட்டியில் வாரம் இருமுறை வாழைச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

இங்கு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சருகுவலையபட்டி, கீழப்பூங்குடி, கீழையூர், சுக்காம்பட்டி, சூரக்குண்டு, வெள்ளாளபட்டி, சாலுார், கொட்டக்குடி, மானாமதுரை, மேலுார் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாழைத்தார், இலைகளை விற்பனைக்குக் கொண்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று (அக்.13) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை காரணமாக அதிக விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இருப்பினும் வாழைத்தார்களுக்கு விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கான விலை கிடைக்கவில்லை. இதனால் பல விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காதது வேதனை அளிக்கிறது - விவசாயிகள்

வார இறுதி நாட்களில் கோயில்கள் திறப்பு?

விளைச்சல் அமோகமாக இருந்ததால் ரஸ்தாளி, நாடு, பூவன், பச்சை, ஒட்டுரகங்கள் உள்ளிட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன.

நாட்டு ரக வாழைத்தார்கள் ரூ.150 முதல் ரூ. 400 வரையிலும், பூவன் ரகங்கள் ரூ. 100 முதல் ரூ. 500 வரையிலும், ரஸ்தாளி ரூ.100 முதல் ரூ. 400 வரையிலும், பச்சை வாழை ரூ. 200 முதல் ரூ. 350 வரையிலும், ஒட்டு ரகங்கள் ரூ. 200 முதல் ரூ. 250 வரையிலும் எனத் தரத்துக்கு ஏற்ப விற்பனையானது.

இந்நிலையில் வாரஇறுதி நாட்களிலும் கோயில்களைத் திறந்தால் மட்டுமே வாழைத்தார்கள், வாழை இலைகள் போன்றவை ஓரளவு நன்றாக விற்பனையாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வாழை விவசாயி எஸ்.ராமலிங்கம், பேசுகையில், 'ஒட்டு ரக காய் நல்ல விளைச்சல் இருந்தும் மானாமதுரை சந்தையில் நல்ல விலை கிடைக்காததால், மலம்பட்டி சந்தைக்கு கொண்டு வந்துள்ளேன்.

ஒட்டு ரக வாழைத்தார் ஒன்றுக்கு ரூ. 50 முதல் ரூ. 70 வரையிலும் விற்பனையானது. கரோனா காலகட்டத்தில் விலையில்லாமல் மரத்திலேயே பழுத்தது. இப்போது பரவாயில்லை, ஓரளவு விலை கிடைக்கிறது' என்றார்.

இதையும் படிங்க: "குடியரசுத்தலைவர் கையால் விருது வாங்குவதே என் லட்சியம்' - 23 வயது இளம் ஊராட்சி மன்றத்தலைவர் சபதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.