ETV Bharat / state

'நாங்க வேற மாறி' - வலிமை ரிலீஸ்; மக்களுக்கு இலவசமாக பால் வழங்கிய அஜித் ரசிகர்கள் - ajith valimai

மானாமதுரையில் அஜித்தின் வலிமை திரைப்படம் ரீலிஸ் செய்யப்பட்டதை கொண்டாடும் விதத்தில், பொது மக்களுக்கு இலவசமாக பால் வழங்கிய அஜித் ரசிகர்களின் செயல் பலரிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.

இலவச பால் வழங்கப்பட்டது தொடர்பான காணொலி
இலவச பால் வழங்கப்பட்டது தொடர்பான காணொலி
author img

By

Published : Feb 24, 2022, 8:24 PM IST

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் இன்று (பிப்ரவரி 24) தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தின் மானாமதுரையில் உள்ள சீனியப்பா திரையரங்கில் வலிமை திரைப்படம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கூட்டம் அலைமோதியது.

இதனையடுத்து அஜித் ரசிகர்கள், திரையரங்கின் முன்னர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஒவ்வொரு முறை அஜித் திரைப்படங்கள் வெளியாகும் போதும், முதலில் அவரது கட் அவுட்டிற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வது வழக்கம்.

இலவச பால் வழங்கிய ஏ.கே.ரசிகர்கள்

இதற்கு மாறாக அனைவருக்கும் இலவசமாக பால் வழங்கிய பின்னர், கடைசியாக அஜித்தின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் உற்சாகத்தினை வெளிப்படுத்தினர். பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கிய அஜித் ரசிகர்களின் செயல் பலரிடத்திலும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பர்த்டே பாய் நானி ப்ரஷ் க்ளிக்ஸ்......

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.