ETV Bharat / state

கீழடியில் தொடர்ந்து வெளிவரும் புதையல்... 2 அடி நீள செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு!

கீழடியில் பழங்காலத்தில் நம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாகச் சுடுமண் செங்கற்களால் கட்டப்பட்டுள்ள, சுமார் 2 அடி நீளம் கொண்ட சுடுமண் செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

keeladi 2 feet long brick construction discovery கீழடியில் 2 அடி நீளம் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு.. தொடர்ந்து வெளிவரும் தமிழர் பண்பாட்டு புதையல்...

author img

By

Published : Jul 4, 2022, 8:35 AM IST

சிவகங்கை மாவட்டம் கீழடியில்,‌ தற்போது 8ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கீழடியில் 8 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கீழடியில் ஒரு குழியில் தோண்டும்போது 4 அடி ஆழத்தில் பழங்காலத்தில் நம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாகச்சுடுமண் செங்கற்களால் கட்டப்பட்டுள்ள சுமார் 2 அடி நீளம் கொண்ட சுடுமண் செங்கல் கட்டுமானச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டுமான சுவரை ஆய்வுசெய்யும் பட்சத்தில், இதனுடைய நீட்சி அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் முன்பு நடந்த 7 கட்ட அகழாய்வில் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டாலும் எட்டாம் கட்ட அகழாய்வில் இதுவே முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கீழடி, அகரம், கொந்தகை‌‌ ஆகிய மூன்று இடங்களிலும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: கீழடி அகழாய்வில் கி.மு. 2600 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புப் பொருட்கள் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.