ETV Bharat / state

ஆணுறுப்பை அறுத்து கொலை.. தகாத உறவின் விபரீதம் - சேலத்தில் நடந்தது என்ன? - ஈடிவி பாரத் செய்திகள்

Youth killing case in Salem: சேலத்தில் இளைஞரின் ஆணுறுப்பை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

young man killing case in salem
சேலத்தில் இளைஞரின் ஆணுறுப்பை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உட்பட இருவர் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 8:17 AM IST

சேலம்: சேலம் மாநகர் சூரமங்கலம் அருகே உள்ள பூனைகரடு பகுதியில், வீடு ஒன்றில் மொட்டை மாடியில் இளைஞர் ஒருவர் கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். அவரது உடலை சேலம் சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஆலந்துடையான்பட்டியைச் சேர்ந்த தியாகு (25) என்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, போலீசார் கொலை செய்தவர்கள் யார் என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், துறையூரைச் சார்ந்த பாலன் - வரலட்சுமி ஆகிய இருவரும், தாங்கள் கட்டட வேலை செய்வதாகவும், தங்களுக்கு வீடு வேண்டும் என கார்த்தி என்ற மேஸ்திரியிடம் கூறி உள்ளனர். உடனடியாக, மேஸ்திரி கார்த்தி, தான் தங்கி இருக்கும் வீட்டின் எதிரே உள்ள அய்யம்பெருமாள் என்பவரின் வீட்டின் மேல் மாடியில் ரூம் காலியாக இருப்பதை அறிந்து, இருவரையும் அழைத்து வந்து அங்கு குடி வைத்துள்ளார்.

மேலும், அய்யம்பெருமாள் மகள் பிரசவத்துக்காக வெளியூர் சென்றதால், அவரும் நம்பி வீட்டை வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாலன் என்ற பாலமுருகன், துறையூரைச் சேர்ந்த சுரேஷ், கொலை செய்யப்பட்ட தியாகு ஆகியோர் மது பாட்டில்கள் வாங்கிக் கொண்டு, பூனைக்காடு பகுதியில் அமைந்துள்ள வாடகைக்கு எடுத்த வீட்டிற்கு சம்பவம் நடந்த அன்று இரவு வந்துள்ளனர்.

அப்போது பாலன், தன் மனைவி வரலட்சுமியிடம் இறைச்சி சமைக்கச் சொல்லி உள்ளார். இதனையடுத்து, மது போதையில் இருந்த பாலன், அவரது நண்பர் தியாகுவை கொலை செய்ததாகவும், அப்போது பாலன் அவருடைய மனைவி வரலட்சுமி, மற்றொரு நண்பர் சுரேஷ் ஆகியோர் அச்சத்தில் தலைமறைவாகியதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து மூன்று பேரையும் தேடி வந்த நிலையில், துறையூரைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், கோவை காரமடை பகுதியில் இருவரும் பதுங்கி இருப்பதாக கூறி உள்ளார். உடனடியாக தனிப்படை போலீசார் பாலன் - வரலட்சுமி ஆகியோரை சேலம் அழைத்து வந்து, விசாரணை நடத்தினர்.

இதில், பாலன் - வரலட்சுமி ஆகிய இருவரும், பெரம்பலூரில் உள்ள கோழிப்பண்ணையில் ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர். ஏற்கனவே, வரலட்சுமி மீது இளைஞர் தியாகு தகாத உறவில் இருந்துள்ளதால், இதனை அறிந்த பாலன், தியாகுவை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், இதனால் சம்பவத்தன்று தியாகுவிற்கு அதிக மதுபானம் கொடுத்து, தலையில் கட்டையால் அடித்து, அவருடைய ஆணுறுப்பை அறுத்து கொலை செய்துள்ளதாகவும் தெரிய வந்தது.

மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக துறையூரைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் பாலனின் மனைவி வரலட்சுமி ஆகியோர் செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த ஜோடியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவு - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.