ETV Bharat / state

நள்ளிரவில் வாலிபர் அடித்துக்கொலை: முகம் சிதைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு! - Youth beaten and killed in salem pallapatti

சேலம்: பள்ளப்பட்டி அருகே கோரிக்காடு பகதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth beaten and killed in salem pallapatti
author img

By

Published : Nov 4, 2019, 7:12 PM IST

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள கோரிக்காடு பகுதியில் புதர் மறைவொன்றில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்கள் மற்றும் முகம் சிதைத்த நிலையில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் இருந்த இடத்தில் பீர்பாட்டில் உடைந்து காணப்பட்டதால் பீர் பாட்டிலால் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சேலத்தில் இளைஞர் அடித்துக்கொலை

மேலும், கொலை செய்யப்பட்ட நபர் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை பற்றி விசாரணை மேற்கொள்வதற்குச் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளார்.

இதையும் படிங்க: கரம்கோர்த்த தமிழ் மகனும் சீன மகளும்; சேலத்தில் ருசீகரம்!

Intro:சேலத்தில் நள்ளிரவு வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Body:சேலம் பள்ளப்பட்டி அருகே கோரி காடு உள்ளது.
இங்கு உள்ள புதரில் மறைவில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க நபர் வாலிபர் தலையில் பலத்த காயங்கள் மற்றும் முகம் சிதைத்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் இருந்த இடத்தில் பீர்பாட்டில் உடைந்து காணப்பட்டதால் பீர் பாட்டிலால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார் என்றும் கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலையில் துப்பு துலக்க சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தனிப்படை அமைத்து உள்ளனர். இதில் சூரமங்கலம் உதவி கமிஷனர் செல்வராஜ் மற்றும் காவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.